முகப்பு அன்மை செய்திகள் எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

17
0
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா – சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “ இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா – இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.
இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த டிரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால்,  ஆனால் அவர்கள் (சீனா) நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள்” என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்