முகப்பு சமையல் புதினா துவையல்

புதினா துவையல்

33
0

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த, ஆய்ந்த புதினா – அரை கட்டு,
தேங்காய் துருவல்- அரை கப்,
அரிந்த வெங்காயம் – அரை கப்,
இஞ்சி – 1 துண்டு,
காய்ந்த மிளகாய் – 5,
பச்சை மிளகாய் – 5,
உ.பருப்பு- 50 கிராம்,
க. பருப்பு- 2 ஸ்பூன்,
புளி- சிறிதளவு,
எண்ணெய்- 2 ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். அத்துடன் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின்னர் பொன்னிறமாக பருப்புகளை வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். (தேவைப்பட்டால் மட்டும் வெங்காயம்) சுவையான புதினா துவையல் தயார். இது பித்தம் நீக்கும். எல்லா சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புத்துணர்ச்சி அளிக்க வல்லது.

HOW TO PREPARE THIS ON VIDEO

HOW TO PREPARE THIS ON VIDEO

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்